வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 மே 2024 (14:06 IST)

மசாஜ் சென்டர்களில் வேலை பார்த்தார்களா நடிகைகள், கல்லூரி மாணவிகள்? அதிர்ச்சி தகவல்..!

Massage
சென்னையில் உள்ள சில மசாஜ் சென்டர்களில் தற்போது காவல்துறையில் ரெய்டு செய்து வரும் நிலையில் அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பறிமுதல் செய்த நிலையில் அந்த வீடியோக்களில் கல்லூரி பெண்கள் மற்றும் நடிகைகள் சிலர் மசாஜ் சென்டர்களில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
உங்களுக்கு மசாஜ் செய்ய துணை நடிகைகள் மற்றும் கல்லூரி பெண்கள் வேண்டுமா என்று வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்புவதாகவும் இதில் சபலப்பட்ட இளைஞர்கள் சென்டர்களுக்கு வரும்போது அவர்களிடம் கல்லூரி மாணவிகள் மற்றும் துணை நடிகைகளை மசாஜ் செய்ய வைத்து பணத்தை கரப்பார்கள் என்றும் இதில் பினிஷிங் டச் என்ற ஒரு நிலையும் உண்டு என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் ரெய்டு செய்த போது பல உண்மைகள் தெரிய வந்துள்ளதாகவும் இந்த மசாஜ் சென்டர்களில் பணத்திற்காக கல்லூரி மாணவிகள் குடும்ப பெண்கள் துணை நடிகைகள் உட்பட பலர் வேலை பார்த்தது இந்த வீடியோக்கள் மூலம் தெரிய வந்தது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran