1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (08:13 IST)

இரவெல்லாம் கொட்டித் தீர்த்த மழை – இந்த மாவட்டங்களுக்கு மட்டும்தான் லீவ் !

இரவெல்லாம் கொட்டித் தீர்த்த மழை – இந்த மாவட்டங்களுக்கு மட்டும்தான் லீவ் !
தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பெய்து வரும் வேளையில் இன்று சில மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்குப் பருவமழைப் பெய்து வருகிறது. இதைத்த் தொடர்ந்து சாலைகளில் வெள்ளம் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரத்தில் சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து நேற்று இரவும் சில மாவட்டங்களில் மழைப் பெய்ததால் புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.