வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2023 (13:20 IST)

சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பதிவு

CycloneAlert
மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற  வாய்ப்புள்ளதால் அதிக கனமழை  மற்றும் காற்று இன்று இரவு வரை தொடரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் காற்றின் அதிகரித்து வருவதால் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் விமானங்களும், வேறு விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

இந்த மோசமான சூழலை விவரிக்க வார்த்தைகள் இல்லை என பிரதீப் ஜான் கூறியிருந்த நிலையில் சென்னையில் அதிகாலை வரை சராசரியாகக 34 செமீ மழை பதிவாகியுள்ளாதாக மாநகராட்சி கூறியது.

இந்த நிலையில், சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது.  கடந்த 201ல் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது 33 செமீ மழை பெய்திருந்த நிலையில், தற்போது அதைவிட அதிக மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.