செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (16:54 IST)

தமிழகத்தில் 4512 வேட்புமனுக்கள் ஏற்பு!

தமிழகத்தில் 4512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதன் பின்னர் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இதில் மொத்தமாக 7,255 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். 

அதில் வாபஸ் பெறப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வேட்புமனுக்கள் எல்லாம் தவிர்த்து மொத்தமாக 4512 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கும் எனக் கூறியுள்ளார்.