வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:07 IST)

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து.. என்ன காரணம்?

Chennai electric train
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11-3:30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள், இன்ஜினியரிங் பணிகள் நடைபெறுகிறது. மேலும்  சென்னையில் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல்  பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. 
 
அதேபோல் சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை,காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
 
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 10.30 காலை 10.40, காலை 10.50, காலை பதினொரு மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11:30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12 மணி, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50 மதியம், ஒரு மணி மதியம் 1:15 மதியம், 1.30 மதியம், 1.45 மதியம் 2 மணி, 2:15, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.05 காலை 10:15 காலை 10:25 காலை 10:45 காலை 10.55 காலை 11.25 காலை 11.35 மதியம் 12 மதியம் 12:15 மதியம் 12.45 மதியம் 1.30 1.45, மதியம் 2:15 மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40 10.55 11.30 மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும், காலை 9:30 மணிக்கு காஞ்சிபுரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும், 11.05 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் என மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மதியம் 11:55 மதியம் 12.45, மதியம் 3.25 மதியம் 3.45 மதியம் 2:20 2.25 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9:30 காலை 9:40 காலை 10.59, காலை 11.05, 11.30 மதியம் 12 மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Siva