செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (14:00 IST)

செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர்!-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhayanithi stalin
செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர்! என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்ற வகையில் செம்மொழிப் பூங்காவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2010-ம் ஆண்டில் திறந்து வைத்தார்கள்.

மாநகரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ள பசுமைமிகு செம்மொழி பூங்காவில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 12 லட்சத்துக்கும் அதிகமான வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மலர்க்கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தோம். அலங்கார வளைவு - செங்குத்து தோட்டம் - யானை - அன்னப்பறவை என காண்போரை ஈர்க்கின்ற வகையில் 25 வகைகளிலான இந்த மலர்க்கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.

சிறப்பான முறையில் இந்த மலர்க்கண்காட்சியை வடிவமைத்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் - அலுவலர்களுக்கு வாழ்த்துகள். செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர்!