1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (13:57 IST)

விரைவில் சென்னை முழுக்க மிகப்பெருமளவில் போராட்டம் வெடிக்கும் -அண்ணாமலை எச்சரிக்கை

annamalai
கிளாம்பாக்கம் பேருந்து  நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து  பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி செல்லப் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகளில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ஆத்திரமடைந்து பயணிகள் புகார் அளித்து, பேருந்துகளை சிறைப்பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, குழந்தைகள், தாய்மார்கள் வயது முதியவர்கள் என 100க்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாக தயாராகும் வரை பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்; விரைவில் சென்னை முழுக்க மிகப்பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.