1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 4 year old kid died in lorry accident

கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி… சென்னையில் நான்கு வயது சிறுவன் பலி!

தண்ணீர் லாரி
சென்னை பட்டிணப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி சிக்னல் கம்பம் விழுந்ததில் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் சிக்னலில் வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தபோது, அந்த பக்கம் வந்த தண்ணீர் லாரி ஒன்று தாறுமாறாக சென்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு நின்ற வாகனங்கள் மேல் மோதியுள்ளது. ஒரு கட்டத்தில் அங்கு  இருந்த சிக்னல் கம்பம் மேல் மோத அந்த கம்பம் விழுந்துள்ளது.

இதனால் சிக்னல் கம்பத்துக்கு கீழே இரு சக்கர வாகனத்தில் தனது தாத்தாவுடன் இருந்த நான்கு வயது சிறுவன் மேல் அந்த கம்பம் விழ, அவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.