வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (17:22 IST)

3 நாட்களுக்கு முன் காணாமல் போன 4 ராமேஸ்வரம் மீனவர்கள் நிலை என்ன?

fishermen
மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கடலில் காணாமல் போன நிலையில் அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன.
 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கோயில்வாடி என்ற பகுதியில் நான்கு மீனவர்கள் கடந்த புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் பிற்பகல் அவர்களை திரும்ப வேண்டும் என்ற நிலையில் அவர்கள் கரை திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதுகுறித்து தகவலறிந்த மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 3 நாட்களுக்குப் பின் 4 மீனவர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிந்ததால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
 
அவர்கள் சென்ற படகில் பழுது ஏற்பட்டதன் காரணமாக மீனவர்கள் நெடுந்தீவு என்ற பகுதியில் தத்தளித்து கொண்டிருந்ததாகவும் அப்போது சக மீனவர்களை பத்திரமாக மீட்டு மீனவர்கள் கரைக்கு அழைத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran