வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (19:45 IST)

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்து ரத்து!

pamban
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே பொறியாளர்கள் ரயில் போக்குவரத்தை நிறுத்தினர்.
 
இந்த  நிலையில் ரயில்வே பொறியாளர்கள் சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கடந்த இரண்டு நாட்களாக ரயில் பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். 
 
மேலும் பயணிகள் இல்லாத காலி ரயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் சில பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனை அடுத்து வரும் 31ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் டிசம்பர் 31 வரை மண்டபம் வரை மட்டுமே ரயில்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva