1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (13:27 IST)

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் 30 பிரபலங்கள்!

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் 30 பிரபலங்கள்!
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகளில் கிடைத்துள்ள நிலையில் அந்த 20 தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதை மானப் பிரச்சனையாக எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய 30 பிரபலங்கள் தமிழகத்துக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் நிதின் கட்காரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட 30 பேர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வரவுள்ளனர்.
 
தேசிய பிரபலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் பாஜக தலைவர்களின் அந்த கட்சிக்கு வெற்றியை பெற்று கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்