கொரோனா பரவலுக்கு பின் மோடி செல்லும் வெளிநாடு இதுதான்!
கொரோனா பரவலுக்கு முன் பிரதமர் மோடி கிட்ட தட்ட மாதம் ஒருமுறை வெளிநாட்டுக்கு சென்று விடுவார் என்றும் என்பதும் அவர் செல்லாத நாடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் சுற்றி வந்து விட்டார் என்பதும் உலகின் பல நாடுகளில் இருந்து முதலீடுகளை இந்தியாவுக்காக அள்ளிக் கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், கடந்த ஒரு ஆண்டாக பிரதமர் மோடி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் பிரதமர் மோடி வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மார்ச் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் பிரதமர் மோடி வங்கதேசம் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி செல்லும் வெளிநாடு வங்கதேசம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.