வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:31 IST)

போதை மாத்திரைகளை விற்ற மூவர் கைது!

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் இடையே போதைப்பழக்கம் அதிகமாகி வருகிறது. இதில் ஒரு பிரிவு மருந்தகங்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுபோல் புதுகோட்டையில் போதை மாத்திரை விற்பனை நடப்பதை அறிந்த காவலர்கள் சிறப்புப் படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அடப்பன் வயல் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த தனசேகர், சக்திவேல், ஹக்கீம் ஆகிய மூன்று இளைஞர்களை போலிசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.