எதிர்கட்சி தலைவர் வீட்டு சிறை; முதல்வர்கள் வர தடை! – பரபரப்பான உத்தர பிரதேசம்!
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் சம்பவத்தை தொடர்ந்து அம்மாநில எதிர்கட்சி தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணித்த பகுதியில் பாஜகவினர் கார் மோதி விவசாயிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்த கலவரம் உள்ளிட்டவற்றால் பத்திரிக்கையாளர் ஒருவர் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிய உத்தர பிரதேசம் வர சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் வர முயற்சித்த நிலையில் அவர்கள் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்கிம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.