வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (14:01 IST)

5 ஆண்டு சிறை தண்டனை... கேட்டதும் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி!

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலியோடு சுவாச கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

 
கடந்த 1991 – 1996 ஆம் ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரகுமாரி. இவர் அமைச்சராக இருந்தபோது காதுகேளாதோருக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்காக இவரது கணவரி நிறுவனத்திற்கே டெண்டர் ஒதுக்கி ரூ.15.45 லட்சம் முறைகேடு செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இதனிடையே சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலியோடு சுவாச கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 
 
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரின் கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.