வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (13:32 IST)

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: 3 பேர் விடுதலை

கடந்த 2000ஆம் ஆண்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ஒன்றில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

அந்த சமயத்தில் எரிக்கப்பட்ட ஒரு பேருந்தில் பயணம் செய்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பலியாகினர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சிறையில் இருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் முவரும் சற்றுமுன் விடுதலை ஆகியுள்ளனர்.

தமிழக ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.