ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:01 IST)

சூப்பர் ஸ்டாராக மாறிய பவர்ஸ்டார் –ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

ராஜீவ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள எழுவர் தொடர்பாக பொறுப்பற்ற கருத்து கூறிய ரஜினியை விமர்சித்து பல கருத்துகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் நடிகர் பவர்ஸ்டாரும் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது நிருபர்கள் எழுவர் விடுதலை குறித்து தங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எந்த எழுவர் என ரஜினி பதில் கேள்வி கேட்டார்.

இந்த சர்ச்சையான பதிலால் சமூக வலைதளங்களில் உள்ள அரசியல் ஆர்வலர்கள் பலர் ரஜினியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது சம்மந்தமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தன் கருத்தை தனது தெரிவித்துள்ளார். நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது பேட்டியாளர் ரஜினிகாந்த் எந்த எழுவர் எனக் கேள்வியெழுப்பி உள்ளார். பவர் ஸ்டாருக்கு அந்த எழுவர் யாரெனத் தெரியுமா எனக் கேட்டார். அதற்கு ‘எனக்கு அந்த எழுவரைத் தெரியும். அவர்கள் பேரை வேண்டுமானாலும் சொல்கிறேன். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட், ஜெயக்குமார். இவர்களைப் பற்றி சூப்பர் ஸ்டாருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நான் ஒரு தமிழன் எனக்கு நன்றாகத் தெரியும்’ என பதிலளித்தார்.

சமூக வலைதளங்களில் அதிகமாக கேலி செய்யப்படும் நடிகர் ஒருவருக்கே இது தெரிந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் கனவில் இருக்கும் ரஜினிக்கு இது குறித்து தெரியாதது ஆச்சரியமாக உள்ளது என நெட்டிசன்கள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.

நேற்று சூப்பர் ஸ்டார் பவர்ஸ்டாராகவும், பவர்ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவும் மாறியுள்ளனர்.