ஏழு பேர் விடுதலை -உலக அளவில் பெருகும் ஆதரவு

Last Modified வெள்ளி, 16 நவம்பர் 2018 (09:10 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக அமெரிக்காவின் நார்சிச் நகர மேயர் தமிழக ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏழுபேர் சம்மந்தப்பட்ட வழககு 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஏழு பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வெளியிட்டது. அதை அடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநர் அதுகுறித்த எந்த பதிலும் அளிக்காமல் அந்த சட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது.

இதையடுத்து எழுவர் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல கவன ஈர்ப்பு போராட்டங்கL உலகளவில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கஜா புயலையும் மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர். அது போலவே அமெரிக்க வாழ் தமிழர்கள் எழுவர் விடுதலைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா நார்விச் நகர மேயர் தமிழக ஆளுநருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் ‘ எழுவர் சம்மந்தப்பட்ட விசாரணையில் முரண்பட்ட அறிக்கைகளும் கலவையான சாட்சியங்களும் உள்ளன. எனவே 28 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட அவர்களை தற்போது அவர்கள் குடும்பத்தோடு வாழ விடுவதே சரியானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க வாழ் சீக்கியர்களும்  இதுபோல பரிந்துரைக் கடிதம் ஒன்றை தமிழக ஆளுநருக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :