நோய்களை தீர்க்கும் அற்புத ஸ்ரீ தன்வந்திரி மந்திரம்...!
இந்து மதத்தில் நோய்களை நீக்கும் தெய்வமாக “தன்வந்திரி பகவான்” கருதப்படுகிறார். அந்த தன்வந்திரி பகவானுக்கு மேற்கொள்ளும் “தன்வந்திரி விரதம்” பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
மாதந்தோறும் வரும் தேய்பிறை திரியாதசி தினத்தில் தன்வந்திரி விரதம் மேற்கொள்ளலாம் என்றாலும் தன்வந்திரி விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினமாக கருதப்படுவது ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை திரியாதசி தினமாகும்.
ஸ்ரீ தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோபகவதே வாசு தேவாய
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:
எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக.