1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (11:03 IST)

சென்னையில் ஒரே இரவில் 26 பேர் மரணம்: கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் பதட்டம்

சென்னையில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று ஆயிரத்து 208 பேர் மட்டுமே கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் மட்டுமே கொரோனா வைரஸால் பலியாகி வருவது குறித்த செய்திகள் சென்னை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
அந்தவகையில் நேற்று ஒரே இரவில் சென்னையில் மட்டும் 26 பேர் கொரோனா வைரஸால் பலியாகி இருப்பது அந்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  அரசு ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் தலா 6 பேர் மரணம் உயிரிழந்துள்ளதாகவும், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், தகவல் வெளிவந்துள்ளது