செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (08:33 IST)

புதிய நோயாளிகளை விட அதிகமான டிஸ்சார்ஜ் எண்ணிக்கை –குறைகிறதா கொரோனா பாதிப்பு?

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே சென்றது. இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமாக 4000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் தினசரிக் கண்டறியப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 4000க்கும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு ஆறுதல் செய்தியாக நேற்று சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் முதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அட்மிஷன் நோயாளிகளை விட அதிகமாகியுள்ளது ஆறுதலை அளித்தூள்ளது. இதுவரை தமிழகத்தில் 71,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.