வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2023 (18:52 IST)

மாநில அளவிலான கேரம் போட்டியில் 24 பேர் வெற்றி

karur
கரூரில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா மற்றும் சஹானா உட்பட 24 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
 
கரூர் பரணி பார்க் பள்ளியில் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் கடந்த 29ம் தேதி தொடங்கி 3நாட்கள் நடந்தது.  
 
12,14வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில்  போட்டிகள் நடந்தது.   இதில் கரூர் திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோயமுத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாணவமாணவிகள்  கலந்து கொண்டனர். 
 
14வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த அப்துல்லா முதல் இடத்தையும், தர்ஷன் 2ம் இடத்தையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பரணிதரன் 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.  அதேபோல்  பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த சஹானா முதல் இடத்தையும், சுபஸ்ரீ 2ம் இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா 3ம் இடத்தையும்  பெற்றுள்ளனர். 
 
அதேபோல்  12வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கோகுலேஷ், சென்னையை சேர்ந்த அஜய், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோரும்,  பெண்கள் பிரிவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த  சாதனா, சென்னையை சேர்ந்த அக்னீஸ்,விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரியதர்ஷினி ஆகியோரும் முறையே  முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். மேலும் இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 24பேர் வெற்றி பெற்றுள்ளனர். 
 
நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவிற்கு  தமிழக கேரம் சங்க மாநில தலைவர் நாசர் கான் தலைமை வகித்தார்.
 
சிறப்பு விருந்தினர்களாக கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மனும் பரணி கல்விக் குழும தாளாளருமான  மோகனரங்கன்,  மாநில பொதுச்செயலாளர் ‘அர்ஜூனா விருதாளர்’ ‘இரு முறை முன்னாள் உலக சாம்பியன்’ மரிய இருதயம், மாநில கேரம் சங்க துணைத் தலைவரும், மாவட்ட தலைவரும்,  பரணி கல்விக்குழும முதன்மை முதல்வருமான  ராமசுப்பிரமணியன், மாநில பொருளாளர் கார்த்திகேயன், போட்டியின் தலைமை நடுவர் ஆல்வின் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் கரூர் மாவட்ட செயலர் சுரேஷ், கரூர் மாவட்ட துணைத் தலைவர்கள்  முகம்மது கமாலுதீன், சுதாதேவி, சேகர், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலர் ஜீவா பல்வேறு மண்டல செயலாளர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட கேரம் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.