தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை
தென்திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்:
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
புரட்டாசி மாதம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆன்மீக பக்தர்கள் இன்று முதல் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் தான்தோன்றி மலை வெங்கடரமனன் ஆலயத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஆலயத்தை சுற்றியுள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.