திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (18:49 IST)

சித்தி விநாயகர் சுவாமிகள் திருவீதி உலா

vinayagar
கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வகர்மா, காயத்ரி தேவி, சித்தி விநாயகர் சுவாமிகள் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது
 
விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை முதல் கரூரில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி தேவி, சித்தி விநாயகர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
 
இதனை தொடர்ந்து மாலையில் அமராவதி நதிக்கரையின் ஸ்ரீவிஸ்வ பிராமண சபையோகார் சார்பில்  விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு திருவீதி உலா நடைபெற்றது.
 
தொழில் கடவுளான ஸ்ரீ விராட் விஸ்வகர்மா, காயத்ரி தேவி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆகிய உற்சவ  சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்ம தீர்த்தம் சாலையிலிருந்து பேருந்து நிலையம் ரவுண்டானா, ஜவகர் பஜார், லைட் ஹோஸ் கார்னர், அகிய முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கையுடன் எடுத்துச் சென்ற  சுவாமியை வழிநெடுங்கிளும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 
 
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீ விஸ்வ பிராமண சபையோர்கள் கைலாய வாகன மண்டப படி மக்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.