வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (10:31 IST)

24 மணி நேரம் ராமாயணம் இசை நிகழ்ச்சி - தமிழக கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு..!!

temple
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது.
 
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் பாடும் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ராம பெருமான் சீதை மற்றும்  லட்சுமனன், அனுமாருடன்  இருக்கும் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

 
மேலும் ஆண்கள் பெண்கள் என  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ராமயண புத்தகத்தை வைத்து ராமாயணம் பாடி வழிபாடு செய்தனர். பெண்கள் ஒன்று கூடி ராமாயண பதிகம் பாடியும் தாண்டியா நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.