1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nirmala Sitaraman visit kanchipuram today

காஞ்சிபுரத்துக்கு வரும் நிர்மலா சீதாராமன்: மக்களுடன் இணைந்து கும்பாபிஷேகத்தை பார்க்கிறார்..!.

நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காஞ்சிபுரம் வர இருப்பதாகவும் அவர் மக்களோடு மக்களாக எல்.இ.டி திரையில் ராமர் கோயில் திறப்பு விழா கும்பாபிஷேகத்தை பார்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது என்பதும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்பதும் தெரிந்தது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்   உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்துக்கு இன்று வருகை தருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் ராமர் கோயில் திறப்பு விழாவை, மக்களுடன் இணைந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் காண போவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், எல்இடி திரையில் மக்களுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண் அடைந்தார்களா?