1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:42 IST)

24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை!

Chennai Beach
சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்குதலினாலும், வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசும், தன்னார்வலர்களும் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் பால் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில்  நிற்பதாகவும் அதிக தொகைக்கு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்து வருகின்ரன.

இந்த நிலையில், சென்னையில் 24 மணி நேரமும்  ஆவின் பால் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசண்ட் நகர், அண்ணா   நகர் கிழக்கு, சோழிங்க நல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின்பால், பால் பவுடர் மற்றும் பால் உப பொருட்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.