திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (21:18 IST)

18 வயதாகாத மாணவனை திருமணம் செய்து கர்ப்பமான கல்லூரி மாணவி கைது!

arrested
18 வயது கூட ஆகாத மாணவனை திருமணம் செய்து கர்ப்பமான 21 வயது கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியை சேர்ந்த 18 வயது கூட ஆகாத கல்லூரி மாணவர் ஒருவரை 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது
 
அந்த கல்லூரி மாணவனுக்கு இன்னும் பதினெட்டு வயது கூட ஆகவில்லை என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 18 வயது கூட ஆகாத மாணவரை திருமணம் செய்து கர்ப்பமான மாணவி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மற்றபள்ளி
 
Edited by Siva