திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (12:27 IST)

பேருந்துக்கு காத்திருந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

thali
பேருந்துக்கு காத்திருந்த 12ஆம் வகுப்பு மாணவியை பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் தாலிகட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் பேருந்துக்காக காத்திருந்தார்.
 
அப்போது அங்கு வந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென தாலியை எடுத்து அந்த மாணவிக்கு கட்டியுள்ளார்/ இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் சிதம்பரம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva