வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (09:01 IST)

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்! – வீடியோ எடுத்த நபர் கைது!

கடலூரில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய வீடியோ வைரலான நிலையில் அதை வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென தாலியை எடுத்து அந்த மாணவிக்கு கட்டியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் அவர்கள் தாலி கட்டியதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது சிதம்பரத்தை சேர்ந்த பாலாஜி கணேஷ் என்று கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து பாலாஜி கணேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K