1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (12:54 IST)

திருமணம் செய்து கொள்வது எப்போது..? – ஓப்பனாக சொன்ன த்ரிஷா!

பிரபல நடிகையான த்ரிஷா பல காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். பல ஆண்டுகளாக நடிகையாக இருந்து வரும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே இருப்பது சினிமா வட்டாரத்தில் தொடர்ந்து விவாதமாகவே இருந்து வருகிறது.


இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து மனம் திறந்த த்ரிஷா “எனக்கு திருமணம் எப்போது என கேட்டால் அதை என்னாலேயே சொல்ல முடியாது. நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்கக்கூடிய நபர் இவர்தான் என ஒருவர் மீது எண்ணம் தோன்ற வேண்டும். அப்படியான நபரை பார்க்கவில்லை. திருமணம் ஆன பிறகு விவகாரத்து பெறுவதில் எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K