மக்களவைத் தேர்தல் 2024: திமுக களமிறங்கும் 21 தொகுதிகள்..!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நாளை மறுநாள் அதாவது மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுத்து உடன்பாடு குறித்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளில் என்பது குறித்த தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு அனைத்து தொகுதிகளும் பிரித்து கொடுக்கப்பட்ட நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதன்படி திமுக தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், மற்றும் பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran