திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (08:51 IST)

509 கோடி நிறுவனத்திற்கு எந்தவித சலுகையும் தரப்படவில்லை: டிஆர் பாலு விளக்கம்.!

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் இருந்து 59 கோடி ரூபாய் திமுக வாங்கி உள்ளதாக நேற்று செய்தி வெளியாக நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியதாவது:

திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் திமுக ஆட்சியில் தரப்படவில்லை;

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான். எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம். மிரட்டித் தேர்தல் பத்திரங்களை பெற்று அம்பலப்பட்டுள்ள பாஜக பற்றி அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமியால் ஏன் முடியவில்லை’ என்ற கேள்வியையும் திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பியுள்ளார்.

Edited by Siva