திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (13:28 IST)

மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு! கடும் அதிருப்தியில் திருநாவுக்கரசர்..!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருச்சி தொகுதி அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக மதிமுகவுக்கு திருச்சி தொகுதி கொடுக்கப்பட்டிருப்பதை அடுத்து அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மீண்டும் தான் போட்டியிட திருச்சி தொகுதி வேண்டும் என்று திருநாவுக்கரசு கட்சி தலைமையிடம் வலியுறுத்தியதாகவும் ஆனால் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு வேண்டும் என்று திமுக எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
தற்போது திருநாவுக்கரசர் வேறு தொகுதியில் போட்டியிட வேண்டிய கட்டாய நிலை இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் அனேகமாக தேனி தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva