திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (07:28 IST)

2018 -ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 2018 -ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் 24 பேர்களுக்கு மத்திய அரசு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

.தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பு பிரிவில் திருடன் மணியன் பிள்ளை என்ற நுாலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணியன் பிள்ளையுட ஆத்ம கதா என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்த மூ.யூசுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த நூலை 'திருடன் மணியன் பிள்ளை' என்ற பெயரில் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தமிழ் சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக சுபஸ்ரீ கிருஷ்ணசாமி அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுப்பாக ஆங்கிலத்தில் சுபஸ்ரீ கிருஷ்ணசாமி  மொழி பெயர்த்துள்ளார்