வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அர்ச்சனைக்கு உகந்த தெய்வீக மூலிகைகள் எவை என்று தெரியுமா...?

தெய்வீக மூலிகைகள் என்று அழைக்கப்படுபவை இலைகள் எனவே இவற்றை தரும் மரங்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இஷ்டமானதாக  கருதப்படுகின்றது.
அவை இறைபூஜைக்கும் வழிபாடுகளின்போதும் முக்கிய வேண்டுதல்களை நிறைவேற்றும் பொழுதும் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வோர் மரத்தின் இலைகளும் வெவ்வேறு கடவுளுக்கும் பயன்படுத்தப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்.
 
தெய்வீக மூலிகைகளில் ஆறு வகையான இலைகள் மிக முக்கியமானவையாகும். அவை துளசி, வில்வம், வேம்பு, அருகு, நெல்லி, வன்னி  போன்றவையே. இவற்றை ஒவ்வோர் கடவுளுக்கும் உரிய இலைகள் அந்தந்த கடவுளுக்கு பயன்படும்.
 
துளசியை விஷ்ணுவுக்கு உகந்ததாகவும், வில்வத்தை சிவபெருமானுக்கும் அளிப்பதோடு, வேப்பமிலையானது அம்மனுடைய விருப்ப  பொருளாக காணப்படுகின்றது. மேலும் இது மாரியம்மனின் மாலையாக, ஆடையாக உலா வரும் வேப்பிலை அம்மனுக்கு உகந்தது  
 
துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும்  பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள். 
 
சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் ஏழு ஜென்ம  பாவங்களும் போகும் என்பது நம்பிக்கை. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். 
 
அருகம் புல்லானது பிள்ளையாருக்கு உகந்ததாக சொல்லப்படுவதுடன் விநாயகரின் வெப்பத்தை தணித்து உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுத்தது இது எனவும் சொல்லப்பட்டுள்ளது. அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர். அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என்று வேறு பெயர்களிலும் இது அழைக்கப் படுகிறது.
 
வன்னி மரத்தின் கீழ் நிறுவப்பட்டு வழிபடும் தெய்வங்களுக்கு சக்தி கூடுதலாகவுள்ளது. மேலும் நெல்லி மரமானது லட்சுமிக்கு பிரியமானதாக  சொல்லப்படுகின்றது.