புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (17:21 IST)

ஸ்டாலின் பிறந்தநாள் விழா – செந்தில் பாலாஜியின் அடுத்த மூவ் …

அமமுக வில் இருந்து பிரிந்து திமுக வில் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு திமுக வில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 14ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்திலபாலாஜி. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரம்மாண்டப் பொதுக் கூட்டத்தை நடத்தி தன ஆதரவாளர்களையும் கட்சியில் இணைத்தார். அவரதுப் பணிகளைப் பார்த்த திமுக தலைமை கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்து சிறப்பித்துள்ளது.

அதையடுத்து நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எம்,பி. சீட் கொடுக்கும் முடிவிலும் .இருக்கிறார் ஸ்டாலின். கட்சியில் இணையும் போது பேசப்பட்ட முக்கியமான விஷயங்களில் எம்.பி. சீட்டும் ஒன்று.

ஆனால் செந்தில் பாலாஜியோ எம்.பி. சீட் வாங்குவதில் அவ்வளவாக விருப்பம் காட்டவில்லையாம். திமுக வைப் பொறுத்தவரை டெல்லிக்கு செல்லும் ஆட்களை விட மாநில நிர்வாகிகளுக்கே செல்வாக்கு அதிகம். அதனால் மாநில அரசியலிலேயே கவனம் செலுத்தி கட்சிக்குள் அசைக்க முடியாத இடத்திற்கு வர ஆசைப்படுகிறாராம். அதனால் எம்.பி.சீட்டை நிராகரிக்கும் முடிவில் இருக்கிறாராம். கட்சி நிறுத்தும் வேட்பாளரை வெற்றிப் பெற வைத்து ஸ்டாலினிடம் நல்லப் பெயர் வாங்கி மாநில அளவில் முக்கியப் பொறுப்புகளைப் பெறும் முனைப்பில் இருக்கிறாரம்.

இதற்கு அடுத்த அஸ்திரமாக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்து அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்து உள்ளாராம். செந்தில் பாலாஜியின் இந்த தீவிரமான முயற்சிகளைப் பார்த்து திமுக விலேயே சிலர் செந்தில்பாலாஜி மீது சிறு அதிருதியில் இருக்கின்றனராம். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையில் கண்ணாக இருக்கிறாரம்.