திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (13:34 IST)

’வரட்டா மாமே.. டுர்ர்..!’ மழை கோட்டு போட்ட ஆடுகள்! – யார் பாத்த வேல இது?

Goats
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆடுகள் சாக்கு பையை மழை கோர்ட்டாக மாட்டி செல்லும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாது என்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் அவைகளுக்கு தேவையான தழைகளை தினமும் பறிந்து வந்து தொழுவத்தில் வைப்பது வழக்கம்.

தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி ஒருவர் மழை ஆடுகளின் மேய்ச்சலை பாதிக்காமல் இருக்க நூதனமான புதிய முறை ஒன்றை கையாண்டுள்ளார். தஞ்சை குலமங்களம் பகுதியை சேர்ந்த விவசாயியான கணேசன் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.

தற்போது மழை தொடங்கியுள்ள நிலையில் சாக்கு பைகளில் ஓட்டை போட்டு மழை கோர்ட்டு போல செய்து ஆடுகளுக்கு மாட்டி விட்டுள்ளார். ஆடுகள் சாக்கு பைகளை அணிந்தபடி மேய்ச்சலுக்கு செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K