1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2024 (15:04 IST)

தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறையால் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு!-திமுக

R S bharathi
மக்களவை தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ள  நிலையில், இப்புதிய நடைமுறையால் 2 சதவீதம் தவறு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார் . 
 
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
 
EVM மற்றும் கண்ட்ரோல் இடையே VVPAT  எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என திமுக புகார் கூறியுள்ளது.
 
இதில், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை ஒரே இணைப்பில் வைக்கக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில்  EVM ,VVPAT இணைப்பாகவும் கண்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்து பயன்படுத்தப்பட்ட நிலையில்,வரும் தேர்தலில் மூன்றையும் ஒரே இணைப்பில் வைத்து பயன்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்து.
 
ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
 
இதுகுறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
 
’’புதிய நடைமுறையால் 2 சதவீதம் தவறு வருவதற்கு வாய்ப்புள்ளது.
 
வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்.
 
22 லட்சம் வாக்குகளில் 46 000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.
 
2 சதவீதம் வாக்குகளில் வித்தியாசம் என்றால் அது சீர்செய்யப்பட வேண்டும் ’’என்று தெரிவித்துள்ளார்.