1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (14:07 IST)

கொரோனா தடுப்புப் பணிக்காக 2,570 செவிலியர்கள் பணியமர்த்த உத்தரவு !

நேற்று தமிழகத்தில் 580 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,409ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 580 பேர்களில் சென்னையில் மட்டும் 316 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2644ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  கொரோனா தடுப்புப் பணிக்காக 2,570 செவிலியர்களை பணியமர்த்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,  பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 5 ஆண்டுகளுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க