1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (10:52 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை!

இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கரையை தொடர்ந்து. இன்று முதல் 15 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியின் பல பகுதிகளின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 13 முதல் 16 ஆம் தேதிக்குள் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.