1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai meteorological says rain in 25 districts

இன்று இரவு 25 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

rain
இன்று இரவு சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் உருவான புயல் கரையை கடந்தாலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருகிறது
 
இந்த நிலையில் இன்று இரவு சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், கோவை, உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மாண்டஸ் புயலால் சேதமடைந்த ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை: அமைச்சர் ஆய்வு