1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (07:56 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு

rain
அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் உருவான புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு, வளிமண்டல சுழற்சி ஆகிய காரணங்களால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
 
மேலும் வடகிழக்கு பருவ மழையும் தீவிரமடைந்துள்ளதால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை உள்பட 33 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva