1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 160 Breweries Not Operating - Task Administration Announcement

160 மதுக்கடைகள் செயல்படாது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

160 Breweries
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் மாதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  வரும் ஜூன் 19 முதல் 30 ஆம் தேதி 12 நாட்களுகு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி எனவும்   தேனீர் கடைகளுக்கு அனுமதி இல்லை; ஹோட்டலில் பார்சலுக்கு மட்டும் அனுமதி எனவும் தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உட்பட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாட்டங்களில் முழு பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளீல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சுமார் 160 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 1843, சென்னையில் 1257: பலி எண்ணிகை கடும் உயர்வு