சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தீவிர ஏற்பாடு !
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது.
தமிழகத்தில் 22,333 பேர் கொரொனாவால் பாதிக்கபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 12757 என உயர்ந்துள்ளது நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1149 பேர்களில் சென்னையில் 804 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்தது.
இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது.
மேலும் ஒருவாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் குறைவான நேரம் மட்டுமே கடைகள் இயக்க முடிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிகிறது.
இதற்காக டாஸ்மாக் முன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி தடுப்புகள் அமைக்கும் பணிகள் பணி நடைபெற்று வருகிறது.