செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 13 ஜூன் 2020 (16:01 IST)

ஆன்லைனில் மதுவிற்பனை குறித்து அமைச்சர் பதில்!

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைப்  பாதுக்காக்கும் பொருட்டு, மத்திய அரசு வரும் ஜுன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குவிசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொது, தமிழகத்தில் விதிகளுக்கு உட்பட்டு  சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் விதிகளுடன் மக்கள் உணர்வை மதித்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், மதுபானத்தை ஆன்லைனில் விற்பது குறித்து, அமைச்சர் தங்கமணி கூறியுள்ளதாவது : ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.