1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (19:08 IST)

மகளை மிரட்டி திருமணம்: அவளுடனே குடும்பம் நடத்திய சித்தப்பா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. உறவுமுறை பாராமல் பெண்களை காம இச்சைக்காக பாலியல் வன்கொடுமை செய்வது தாங்க முடியாத வேதனையாக உள்ளது. 
 
புதுக்கோட்டை அருகே அண்ணன் மகள் என்றும் பாராமல் 15 வயது சிறுமியை அவரது சித்தப்பாவே மிரட்டி திருமணம் செய்து குடும்பம் நம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
10 ஆம் வகுப்பு படித்து வரும் குறிப்பிட்ட மாணவி பள்ளியில் நேரம் முடிந்து பல மணி நேரம் ஆனாதும் அன்று வீட்டிற்கு திரும்பவில்லை. மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
 
புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை செய்து வந்த போலீஸார் சிறுமியின் சித்தப்பா ரமணிதரன் என்பவர் மாணவியை மிரட்டி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததை கண்டறிந்தனர். 
 
பின்னர் உடனடியாக மாணவியை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியின் சித்தப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.