திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (10:16 IST)

சிலை உடைப்பு - மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் விவகாரம்

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்துது ஏற்கனவே கடும் எதிர்ப்புக்கு ஆளானது. அந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சிலமணி நேரங்களில் நீக்கிவிட்டார். 
 
அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக் கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்த பின் அந்த சர்ச்சை ஓய்ந்து போனது.
 
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையை நேற்று இரவு சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இதுபற்றி, ஆலங்குடி காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.