சனி, 20 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (20:07 IST)

கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடி விடுவிப்பு - மத்திய அரசு

கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடி  விடுவிப்பு - மத்திய அரசு
கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நடந்தது.

இதில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களை ஆளுங்கட்சியான திமுக பிடித்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், கிராம உள்ளாட்சி அமைப்புகளான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு ரூ.15,075 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்திற்கு ரூ.1,380 கோடி வரையில் தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இதேபோல், குஜராத் மாநிலத்திற்கு ரூ.1181 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.3,733 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.1,472 கோடி என ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.