பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக நிர்வாகி கைது
ஜார்கண்டில் பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்வதாக பாஜாக பிரமுகர் சீதா பத்ராவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக தேசிய மகளிர் அணி உறுப்பினராக இருப்பவர் சீமா பத்ரா. இவர் தன் வீட்டில் பழங்குடியின பெண்ணான சுனிதாவை தன் வீட்டில் வேலை செய்வதற்காக 10 ஆண்டுகளுக்கு முன் அழைத்து வந்துள்ளார்.
அங்கு பணியாற்றியதுடன் டில்லியில் அவர் மகள் வத்சலா பத்ராவின் வீட்டிலும் சுனிதா பணியாற்றி வந்துள்ளார். வத்சலா பணிமாற்றம் செய்யப்பட்டதால், சீமாவின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் சுனிதா.
அப்போது, சுனிதாவை தாக்குவது, கழிவறையை வாயால் சுத்தம் செய்வது உள்ளிட்ட சித்தரவதைகளுக்கு உட்படுத்தி கொடுமை செய்துள்ளார் சீமா. அப்போது, சீமாவின் மகண் சில அதிகாரிகளுக்கு இதைப் பற்றி தெரியப்படுத்தி சுனிதாவைக் காப்பாற்றி முயற்சித்துள்ளார்.
அதன்பின் சுனிதா மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சுனிதாவை சித்ரவதை செய்த பாஜக பிரமுகர் சீமா பத்ராவை ராஞ்சி போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த மா நிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் மீதான புகாரை சீமா மறுத்துள்ளார்.